Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம், கோட்டாட்சியர் காயத்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லிராஜ்குமார், சார்ஆட்சியர் கெளரவ்குமார், துணைஆட்சியர் தனப்பிரியா,  மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் சாந்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில்  பாலக்கோடு வட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி கட்டிடங்களின் உறுதிதன்மை, சாலை பணிகள், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமாங்களில் வனவிலங்குகளின்  நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.


அதனை தொடர்ந்து பாலக்கோடு வட்டத்தில் செயல்பட்டு வரும் ஒன்பது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 71 இலட்சம் ரூபாய் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். 


இந்த ஆய்வுக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா, டி.எஸ்.பி. சிந்து, முதன்மை கல்வி அலுவலர் ஜெயசந்திரா, தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தர், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies