Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்.


பென்னாகரத்தில் பேரூராட்சிக்குட்பட்ட போடூர் நான்கு சாலை பகுதியில் இருந்து அம்பேத்கர் சிலை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நெடுஞ்சாலை துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி தீவிரம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள கடைகளின் முன்பு  புதியதாக கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து கடும் நெரிசலை சந்திக்கிறது இதனால் சாலையோர இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அதேபோல முள்ளுவாடி பழைய பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளன பென்னாகரம் பகுதி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டுள்ளதால் கல்வி வேலைவாய்ப்பு காய்கறிகளை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் கிராமப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் பென்னாகரத்திற்கு வந்து செல்கின்றனர்.


கடை வாடகைக்கு எடுத்து  வைப்போர் நாளடைவில் பிரதான சாலைகளை ஆக்கிரமிப்பதால் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள்  வருவோர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர் மேலும் காவல் நிலையம் எதிரே உள்ள வாரச்சந்தை பகுதியில் தினசரி காய்கறி கடைகள் வைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்ட போதிலும் ஒகேனக்கல் பிரதான சாலையினை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் காலை மாலை வேளையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன.


 பிரதான சாலைகளை ஆக்கிரமித்து உள் வாடகையின் மூலம் கடைகள் வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த இரண்டு வாரமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கியின் மூலம் முன்னறிவிப்பு செய்து வந்தனர்.


இதனையடுத்து இன்று சாலை ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைத் துறையினர் அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறை பாதுகாப்புடன்  ஜேசிபி இயந்திரம் மூலம் பென்னாகரம் போடூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து காவல் நிலையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடைவீதி பழைய பேருந்து நிலையம் முள்ளுவாடி பேருந்து நிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறைற வரை ஆக்கிரமிப்புக்களை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies