மாண்புமிகு ஆளுநர் அவர்களின் தலைமையில் கடந்த 06.11.2023 அன்று நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான தொகுப்புநிதியின் மாநில மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் உள்ள பல தனியார் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் கல்லூரி நிர்வாகமே முழு செலவினத்தையும் ஏற்று மாணவ/மாணவிகளுக்கு இலவசமாக உயர்கல்வி படிப்பதற்கு வழிவகை செய்து தருவதால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பும் கல்லூரியினை நேரில் அணுகி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்த்து பயன்அடையுமாறும், இது குறித்து ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpg)