Type Here to Get Search Results !

பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சியர்.சாந்தி நேரில் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பாரதியார் நகரில் கடந்த  15ம் தேதி மாலை 5.30 மணிக்கு இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்  மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் படுகாயமடைந்த 21 பேருக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரனம் அறிவிக்கப்பட்டு நிவாரன தொகையும் வழங்கப்பட்டது.


விபத்து குறித்து மேற்கொண்ட ஆய்வில் திம்மம்பட்டி முதல் மல்லுப்பட்டி வரை  தார்சாலை வழுவழுப்பாக உள்ளதால் சிறிது மழை பெய்தாலும், வாகனங்கள் பிரேக் நிற்காமால் விபத்து ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 60 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இன்று காலை விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சாந்தி,தற்காலிகமாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள. நெடுஞ்சாலை துறையினருக்கு தரவிட்டார்.


இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் காயத்திரி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், டி.எஸ்.பி. சிந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தர், ஜெர்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், தர்மபுரி மாவட்ட ஆத்மா இயக்குநர் ஏ.வி.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies