Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே புதூர் சோளப்பாடி கிராமத்தில் சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது.


நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பழனி தலைமை வகித்தார். தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற நா.நாகராஜ் வரவேற்று பேசினார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முத்து, மகாராஜன், முருகேசன், தே.கமலேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் வழங்கினர்.


ஏரியூர் துணை காவல் ஆய்வாளர் முருகன், மாவட்ட மன்ற உறுப்பினர் சி.வி.மாது, துணைசேர்மன் தனபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ், கவுன்சிலர் மயில்சாமி, வார்டு நம்பர் உறுப்பினர்கள் வெண்ணிலா மல்லமுத்து, சாந்தி ஞானசேகரன், தலைமையாசிரியர்களான சின்னதம்பி, பழனியப்பன், கண்மலர், உதவித் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சாமி  சமூக ஆர்வலர்களான மா.நரசிம்மகுமார், மு.பிரேம்குமார் அறக்கட்டளை நிர்வாகிகள் வைரம், கிருஷ்ணன், ரகுராமன், குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் வெ.யுவராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது பேசுகையில் "இன்றைய சூழலில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு அவசியமானது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பதும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதும் நமது கடமை என்றார் " 


நிறைவாக இயற்கை முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்வில் 100 மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட் பேனா வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான ஊர் பொதுமக்கள் மக்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies