Type Here to Get Search Results !

சமூக வலைதளத்தில் தற்கொலை முயற்சி வீடியோ பதிவிட்டு போலீசாரை அலரவிட்ட தம்பதிகள்; இரவோடு இரவாக காப்பாற்றிய போலீஸ்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த  பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் பழனி மகன் மணிகண்டன் இவருக்கு திருமணம் ஆகி சந்தியா என்கின்ற மனைவியும் மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் பழனிக்கு ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. உடன் பிறந்த தேவன் தங்கராஜ் மகன் சேட்டு ஆகிய இருவரும் இவர்களுக்கும் நில சம்பந்தமான பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. பழனி மற்றும் உடன் பிறந்த தம்பி மற்றும் மகன்கள் சேர்ந்து தம்பதியர் மற்றும் அம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் என் மனம் உடைந்த தம்பதியினர்  நேற்று  தம்பதிகள் இருவரும் கை குழந்தையுடன் செல்போனில் மூவரும் விஷம் அருந்துவது போல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.


பின்பு செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது இந்த வீடியோவானது காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனை கண்ட போலீசார் செல்போன் சிக்னலை வைத்து  மறைந்து இருந்த இடத்தை  கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதிகள் செல்போனில்  தற்கொலை வீடியோ பதிவு செய்து அனுப்பியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies