Type Here to Get Search Results !

கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராசரின் பிறந்தநாள் விழா.


தருமபுரி மாவட்டம்  மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின்  தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய சாக்கம்மாள், தலைமையில் SMC.தலைவர் ரேவதி முன்னிலையில் கர்மவீரர் காமராசரின் பிறந்தநாள்  கல்வி வளர்ச்சி நாளாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் பள்ளிக்குச் சீர்தட்டுகள், இனிப்புகளும், பழக்கூடைகளும், எடுத்துவர மேளவாத்தியத்துடன்.பள்ளிமாணவர்களின் பேரணியில் திரளாக வருகைதந்து கல்விவள்ளல் காமராசரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தனர் கெலவள்ளி கிராமத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் காமராசர் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.செந்தில் மற்றும்  சுதாகர், கே.செந்தில்குமார், ஆர்.செந்தில்குமார் காளியப்பன், மணிகண்டன், ஆறுமுகம், மேகநாதன், சிவசக்தி, சிவசங்கர், அனைத்துப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு  மாணவர்களுக்கும் பரிசுகளும், காமராசர் புகைப்படமும் மதிய உணவாக பிரியாணி நல்விருந்தும் வழங்கி சிறப்பித்தனர்.


மேலும் ஊரின் நேதாஜி நற்பணி மன்ற தலைவர் வெங்கடேசன், பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட், வழங்கி வாழ்த்தி பேசினார், பள்ளி ஆசிரியர்கள், தீர்த்தகிரி, ஆறுமுகம், மணிமேகலை, கண்ணகி, இந்துமதி, லஷ்மி, பாக்கியராஜ் மற்றும் இரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறிbவிழாவை சிறப்பாக நடத்தினர்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies