Type Here to Get Search Results !

தொடர்ந்து 500வது நாளாக இலவசமாக உணவு வழங்கிவரும் தருமபுரி உணவு வங்கி குழுவினர்.


தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அருகில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நோக்கத்தோடு 20 தொண்டு  நிறுவனங்கள் இணைந்து தருமபுரி உணவு வங்கி என்ற அமைப்பை ஏற்படுத்தி உணவு வழங்கி வருகின்றனர்.


இவ்வமைப்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவரும் ஏழை எளிய மக்களுக்கு  உணவு வழங்கும் நோக்கத்தோடு மார்ச் 08, 2023 மகளிர் தினத்தன்று   தொடங்கப்பட்டது. இன்று  500வது நாள் முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக தருமபுரி லிட்டில் சாய் குழந்தைகள் நல மருத்துவமனை மோகன்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். தருமபுரி மக்களின் ஆதரவோடு  500வது நாளாக இன்று PPDC தொண்டு நிறுவனம், PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் 100 நபர்களுக்கு மதிய உணவும் இனிப்பும்  வழங்கப்பட்டது.


இன்றைய நிகழ்வில் காசிமணி PPDC தொண்டு நிறுவனம், வினோத் நரசிம்மன் இந்தியன் பில்லர்ஸ், தேவகி பரமசிவம் ஸ்ரீ தேவிமகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, வினோத்குமார் பசியில்லா தருமபுரி, கோகுல் No Food Waste, கலைவாணி WCWR உலகலாவிய மகளிர் அமைப்பு, சந்திரகலா Reeds NGO, ராமன் அதியமான்கோட்டை, PSP சுரேஷ்குமார் PSP டிபார்ட்மெண்ட் ஸ்டோர், Dr ஜெயப்பிரியா வெங்கடேஷ் யோகா ஆசிரியர், ஞானவேல் கேபிள் ஆப்ரேட்டர்,  ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இன்றைய நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தருமபுரி உணவு வங்கியின் ஒருங்கிணைப்பாளர் காசிமணி PPDC -NGO அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies