Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்ட 21 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாடு துறையின் சார்பாக கடந்த ஜனவரி-2023 முதல் ஜூன்-2024 வரை சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்து கடைகள், தனியார் பதிவு பெற்ற மருத்துவர்களின் கிளினிக், அரசு மருத்துவ மொத்த மருந்து சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு மருந்துவமனை மருந்தகங்கள், இரத்த வங்கி மற்றும் இரத்த சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்ட 21 மருந்து கடைகள் மீது மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 43 இனங்களில் குற்றவியல் நடுவர் நீதி மன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் சட்ட விதி மீறல் செய்த 08 மருந்து கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மருந்து கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக ரூபாய் 6,50,000/- அபராதம் மற்றும் சிறை தண்டனையும், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்ததற்காக 02 வழக்குகளில் அதனை தயாரித்து, விற்பனை செய்த மருந்து நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக ரூபாய் 65,000/- அபாரதம் மற்றும் சிறை தண்டனையும் மாண்பை நீதி மன்றங்களால் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் படி சட்ட விதி மீறல் செய்த 06 மருந்துகடைகளின் மீது மருந்துகள் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாடு துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies