தருமபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொதுப்பிரச்சனை தொடர்புடைய மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரார் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர் மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை 600 009 என முகவரிட்டு நேரடியாகவோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ 2024 ஜுலை 31-க்குள் அனுப்பலாம்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாகவும் ஒரேயொரு துறை சார்ந்ததாகவும், நீண்ட நாள் தீர்க்கப்படாத பொதுப்பிரச்சனையாகவும் இருத்தல் வேண்டும். தனிநபர் குறை, நீதிமன்ற வழக்கு நிலுவை இனங்கள், வேலைவாய்ப்பு, முதியோர் ஒய்வூதியம், அரசின் இலவசங்கள், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், தொழில் கடன், அரசு பணியில் மாறுதல், போன்ற கோரிக்கை மனுக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் 2024 ஜுலை 31 பிறகு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
ஒரே மனுதாரர் பல மனுக்களை அளிக்கும் நேர்வில் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் மனுவினை மட்டுமே குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

