Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் வரும் 18.07.2024 ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம். - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜூலை மாதத்திற்கான ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் பாலக்கோடு வட்டத்தில் வரும் 18.07.2024 அன்று காலை 09.00 மணிமுதல் 19.07.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜூலை மாதத்திற்கான முகாம் பாலக்கோடு வட்டத்தில் வருகின்ற 18.07.2024 அன்று காலை 09.00 மணிமுதல் 19.07.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது.


மேற்படி நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய் வட்டத்தில் தங்கி கள தணிக்கையில், ஈடுபட்டு அரசு அலுவலங்களை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் 18.07.2024 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட அளவிலான முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் அதனை தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து மனுக்களையும் பெற உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies