Type Here to Get Search Results !

மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கான பாலக்கோடு சர்க்கரை ஆலையின் முக்கிய அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 137778 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 10.10% சர்க்கரை கட்டுமானம் அடைந்துள்ளது. சர்க்கரை கட்டுமானத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். 

மேலும் 2023-24 நடவு பருவத்திற்கு இது வரை சுமார் 3000 ஏக்கர் கரும்பு ஆலை அரவைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பதிவு செய்துள்ள கரும்பிற்கு சர்க்கரை கட்டுமானம் 10.10% அடிப்படையில் ஆலை மெ.டன் ஒன்றிற்கு ரூ.3350/- மற்றும் தமிழ் நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை மெ.டன் ஒன்றிற்கு ரூ.215/-, ஆக மொத்தம் கரும்பு மெ.டன் ஒன்றிற்கு ரூ.3565/- கிடைக்க உள்ளது.


மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.12500/-, ஒரு பரு கரணை கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3750/-, திசு வளர்ப்பு நாற்றுக்கு, நாற்று ஒன்றுக்கு ரூ.6/- மானியமாக வழங்கப்படுகிறது.


கரும்பு நடவு செய்து, இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள் அனைவரும் வரும் 30.06.2024 அன்றுக்குள் பதிவு செய்து, ஆலை நல்ல முறையில் இயங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு செயலாட்சியர் திரு.வீ.இரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies