Type Here to Get Search Results !

அக்னிவீர் திட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்தேர்வு.


உத்தரப் பிரதேசம்  மாநிலம்,  பரேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் (JAT  Regtiment Center) அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் வருகின்ற 01.07.2024 முதல் 08.07.2024 வரை அக்னிவீர் திட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. 


இந்த ஆட்தேர்வில் Tradesman, clerk போன்ற பணிகளுக்கு ஆட்தேர்வு நடைபெறுகின்றன என்றும் இதில் முன்னாள் படைவீரர்களின் மகன் / மகள், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள்,  படைபணியின்போது உயிர்நீத்தவர்களின் வாரிசுகள், முன்னாள் படைவீரர்களின் வளர்ப்பு மகன்கள், திருமணமாகாத சகோதரர்கள், (JAT  Regtiment Center)  ல்  பணிபுரித்து வரும் படைவீரர்களின் சார்ந்தோர்கள் மற்றும் இப்படைபிரிவில் பணிபுரித்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் இதனை தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் முன்னாள் படைவீரர்களின் சீறார்கள் கலந்துகொண்டு பயனடைந்திடுமாறு  தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies