Type Here to Get Search Results !

பென்னாகரம் பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க கோரியும், வணிகர் சங்க மஹாலில் சங்க தலைவர் சத்தியநாராயணன் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.


பென்னாகரம் பேருந்து நிலையம் புதியதாக கட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகள், தற்போது கட்டிடப் பணிகள் மட்டும் முடிக்கப்பட்ட நிலையில் தரை அமைக்காமல் பல மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். 


இது குறித்து பலமுறை பொதுமக்களும் மற்றும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வந்தது.  தற்போது தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மக்கள் நிற்க கூட இடமில்லாமல் வெட்ட வெளியில், மழை, வெயிலில் கார்த்திருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் குடிநீர் வசதி, போதுமான கழிவறை வசதி போன்றவை எல்லாம் அறவே இல்லை. 


இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரும் நகரங்களுக்கு சென்று வருகின்ற மக்கள், தினமும் அலுவலகத்துக்கு செல்லுபவர்கள் சிறு வணிகர்கள் என பெரும்பான்மையான மக்கள் பாதிக்கிற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையை கண்டு மாவட்ட நிர்வாகம் தீர்த்துக் கொடுக்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதி காத்து நிற்கிறது. 


எனவே இந்த பேருந்து நிலையத்தை  அடிப்படையில் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும், மேலும் இனிமையும் பேருந்து நிலையம் திறக்க காலதாமதம் செய்தால் பெண்ணாகரத்தில் இருக்கும் அனைத்து வணிகர்களும் அழைத்து  கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்துவோம் என்று வணிகர் சங்கத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies