அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூன், 2024

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (11.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்ரஹாரம் ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய சுகாதார வளாக(CSC) கட்டுமான பணிகளையும், கொளகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் RBIOCGS திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளையும், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ள இரண்டு பயனாளிகளின் வீட்டின் நிலை குறித்தும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இதனைத் தொடர்ந்து, அரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி மற்றும் புதிய நூலக கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கட்டுமான பணிகளை முழுமையாக ஜூலை மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


மேலும், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் ஆகிய திட்டங்களின் செயலாக்கத்திற்காக நடைபெற்று வரும் கள ஆய்வு பணிகளின் நிலை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், குளிர்பதனக்கிடங்கு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் விற்பனைக்கூடத்தின் வசதிகள் மற்றும் விலை நிலவரம் கேட்டறிந்தார்.


மேலும், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் மற்றும் பருத்தி ஆகியவற்றிக்கு நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர் e-NAM ஆய்வுக்கூடத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்து, e-NAM பரிவர்த்தனையில் அதிக அளவில் வியாபாரிகள் கலந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெல் விவசாயிகளிடம் விழிர்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் நெல் விளைபொருளை e-NAM மூலம் பரிவர்த்தனை செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுரை வழங்கினார்.


இந்த ஆய்வுகளின்போது, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கு.சர்வோத்தமன், திரு.ச.இளங்குமரன், தருமபுரி விற்பனைக்குழு செயலாளர் திரு.மு. இரவி, துணை இயக்குநர் திரு.இளங்கோ (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) தருமபுரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், வேளாண்மைத்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad