Type Here to Get Search Results !

மங்களப்பட்டியில் குடும்ப தகராறில் மனைவி திட்டியதால் கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மங்களப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அன்பரசு (வயது.32) இவரது மனைவி செவத்தமல்லி, இவர்களுக்கு திருமணமாகி ஸ்ரீமதி (வயது. 6) மௌனிஸ்வரன் (வயது .5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். அன்பரசு குடும்பத்தை கவனிக்காமல் தான் சம்பாரிக்கும் பணத்தில் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாலை வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்த அன்பரசை மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட. தகராறில் விரக்தியடைந்த அன்பரசு அன்றிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் அன்பரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies