Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மைத்துறை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மைத்துறை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து பயிற்சி வகுப்பு, வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் அவர்களின் தலைமையில் நடந்தது.

இப்பயிற்சி வகுப்பில் ஒருங்கிணைந்த  ஊட்டசத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல்.  காட்டுப்பன்றி, மயில்களை கட்டுபடுத்தும் முறைகள், மீன் அமிலம்  தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி  சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் தொழில்நுட்பபங்கள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குனர் அருள்மணி  விளக்கி பேசினார். வேளாண்மை அலுவலர் தேவி அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கு பெறும் வழிமுறைகள் குறித்து கூறினார். 


இப்பயிற்சி முகாமில் வேளாண்மை அலுவலர் அர்சுனன், துணை வேளாண்மை அலுவலர் முருகன்,  உதவி வேளாண்மை அலுவலர்கள்  மாரிமுத்து கிருஷ்ணன், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies