Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, உலக உணவு பாதுகாப்பு தின விழா மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  உலக உணவு பாதுகாப்பு தின விழா மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன்,  ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நியமன அலுவலர் , ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு   எதிர்பாராததை தயார் செய்  என்ற கருப்பொருளுடன் உலக உணவு பாதுகாப்பு தின விழா அனுசரிக்கப்படுகிறது.


மனிதன் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு, சக்தியை மட்டும் தருவதாக இருக்க வேண்டும் அதற்கு மாறாக  அவனுக்கு கெடுதல்  கொண்டு வந்து சேர்க்கும் என்றால் அது நிச்சயமாக உணவாக இருக்க இயலாது. எனவே உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து விஷயங்களை முக்கியமாக பின்பற்ற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வலியுறுத்துகின்றது.


அவை தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறசுத்தம், பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளை பின்பற்றுதல், உணவை உட்கொள்ளும் முன் அது கலப்படம் இல்லாமலும் கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல் மேலும் நீங்கள் உண்ணும் உணவைப் பற்றிய தகவல்களை விபரச்சீட்டில் இருந்து அறிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கியமான ஐந்து தூண்கள் ஆகும் இவற்றை கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான முறையில் வாழலாம் என பேசினார். மேலும் உணவு பொருட்களில் உள்ள கலப்படம் குறித்து அறிந்து கொள்வதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், இந்துமதி, குணசேகரன், அழகு மற்றும்  மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன், ஹோட்டல் சங்கச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகி அன்னை சத்யா வடிவேல் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் நன்றி உரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies