Type Here to Get Search Results !

இனி திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தகவல்.

நாடாளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது


நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 6.6.2024 அன்று விளக்கிக் கொள்ளப்பட்டதால் வரும் 10.6.2024 திங்கட்கிழமை முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற உள்ளது


இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண உள்ளார்கள். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies