Type Here to Get Search Results !

பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.


பென்னாகரம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சிகூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவியாளர் சின்னசாமி முன்னில வைத்தார்.இந்த கூட்டத்தில் 10 வார்டு கவுன்சிலர் ரேவதி லட்சுமணன் தனது வார்டில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும் இதுகுறித்து பலமுறை பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால் தன்னையும் தனது வார்டையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.


மேலும் இதனைத் தொடர்ந்துபேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் 30 நாட்களுக்குள் தங்கள் வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்யத் தவறினால் தனது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies