Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அடுத்த வேடம்பட்டியில் வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த வேடம்பட்டியில் வசித்து வந்தவர் சிவராஜ் (வயது. 46) இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு திருமண வயதில் 2 மகன்கள் உள்ளனர். சிவராஜ் விவசாயம் செய்து வந்தார், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்,


இருப்பினும் வயிற்று வலி குணமாகாததால் விரக்தியில் காணப்பட்டவர் கடந்த 11ம் தேதி இரவு மதுவில் பூச்சி கொல்லி விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவராஜ் நேற்று முன்தினம் இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies