பென்னாகரம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 18 வார்டுகள் உள்ளடக்கி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சமீப காலமாக இங்கு உள்ள தெருக்களில் நாய்கள் அதிகரிப்பினால் பள்ளிக்குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி குழந்தைகளை நாய்கள் துரத்துவதும், நாய்களினால் வாகனங்கள் நடுவில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பென்னாகரத்தில் தெரு நாய்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
ஜூன் 01, 2024
0
Tags
.gif)

