இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது, பாமகவின் வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்களுக்கும் திமுகவின் வழக்கறிஞர் மணி அவர்களுக்கும் பலத்த போட்டி நிலவியது, பிற்பகல் வரை பாமக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார், அதன் பின்னர் திமுக வேட்பாளர் முன்னிலை பெற தொடங்கினார் முடிவில் திமுகவின் வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணி அவர்கள் 432667 வாக்குகளும், பாமக வேட்பாளர் திருமதி.செளமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர். அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி.அபிநயா பொன்னிவளவன் 65381 வாக்குகளும் பெற்றனர்.
திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி பாமகவின் வேட்பாளர் திருமதி. சௌமியா அவர்களை விட 21,300 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார், அவருக்கு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி. சாந்தி அவர்கள் வெற்றி சான்றிதழை வழங்கினார், அப்போது அமைச்சர் திரு. MRK. பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு. DNV. S.செந்தில்குமார், திமுக மாவட்ட செயலர்கள் திரு.P.பழனியப்பன், திரு.தடங்கள்.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

.jpg)