Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் - ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.


கட்டடத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பென்னாகரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் முனுசாமி,தமிழ்நாடு ஏஐடியூசி மாநில துணைத் தலைவரும்,மாவட்ட பொதுச் செயலாளருமான கே.மணி ஆகியோர்  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் எம் மாதேஸ்வரன் வாழ்த்துரை வழங்கி பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.சி.மணி,கௌரவ தலைவர் ஆர் சுதர்சனன்,மாவட்டத் துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர்.


கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்பு நிலை மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.


மேலும் தருமபுரி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் அளிக்கப்படும் கேட்பு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பதிவு செய்துள்ள அனைவருக்கும் திருமண உதவி தொகையை உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும்,கட்டட தொழிலாளர்களுக்கு கல்வி, மகப்பேறு, இயற்கை மரணத்திற்கு வழங்கும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்,வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்தி வீடு இல்லா கட்டட தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கட்டுமான நல வாரிய கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ராஜி,விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies