Type Here to Get Search Results !

அரூரில் ஶ்ரீகாமாட்சியம்மன், ஶ்ரீமாரியம்மன், தேர்திருவிழாவில் நிறைவு நாளில், பெண்கள் 108 பந்தம் கையில் ஏந்தி, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்.


தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது இதில் காமாட்சி அம்மன் கோவில் ஒரு சமூகத்திற்கு மற்றும் சொந்தமானது இந்த காமாட்சி அம்மன் காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை வைகாசி மாதங்களில் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு காமாட்சியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை அடுத்து 11 நாள் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. 


இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பில் அபிஷேகங்கள் நடத்திய அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி ஊர்வலம் வரும் பொழுது பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் விழாவின் இறுதி நாளில்  காளியம்மன் கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவின்போது பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கையில் 108 பந்தங்கள் ஏந்தி தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். 


அப்பொழுது சாமிஎடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழா வானவேடிக்கை முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் பாபு(எ)அறிவழகன் செயலாளர் சரவணன் பொருலாளர் சேட்டு துணை தலைவர் மதன் இணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies