Type Here to Get Search Results !

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயது பெண் குழந்தைக்கு தட்டணுக்கள் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பின் கொடையாளர்கள்.


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். குழந்தைக்கு அவசரமாக தட்டணுக்கள் தேவைப்பட்டதை அறிந்து தருமபுரியில் இருந்து வேலூர் சென்று நான்கு நபர்கள் தட்டணுக்கள் தானம் அளித்தனர். 


இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா கூறுகையில், நான் மற்றும்  சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் விஜயகாந்த், சமூக சேவகர் ஆதிமூலம் ஆகியோர் தட்டணுக்கள் தானம் அளித்தனர். தட்டணுக்கள் தானம் அளிக்க வேலூர் சென்று வர உதவிய தம்பிதுரை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தட்டணுக்கள் தானம் வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றுவோம். தட்டணுக்கள் தானம் அளிப்போம் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். என மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies