தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது இதனால் தினமும் 100 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், மாலை பழுத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் பாலக்கோடு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதில் பாலக்கோடு நகர பேரூராட்சி பகுதியில் பெய்த கனமழையால் மழைநீர், கழிவுநீர் இணைந்து நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதேப்போல் பிரதான சாலைகள் மற்றும் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் மழைநீர் வெளியேற வழியில்லாததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் தேங்கிய மழை நீரிலே நடந்து சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகி ஆளாகினர்.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் மூன்று நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.