Type Here to Get Search Results !

சீரியம்பட்டி கிராமத்தில் வழி தகராறில் இராணுவ வீரரை தாக்கிய சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூபால் (வயது.41) இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறையில் ஊருக்கு வந்தார், அப்போது இவரது வீட்டிற்க்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இரவிசந்திரன் (வயது .55) என்பவர் போக்குவரத்திற்க்கு இடையூறாக அவரது  டிராக்டரரை நிறுத்தி வைத்திருந்ததை எடுக்க கூறி உள்ளார். டிராக்டரை எடுக்காததால் பூபால் டிராக்டரை எடுக்க கோரி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த இரவிச்சந்திரன், அவரது மனைவி தீபா(வயது.45) மற்றும் அவரது உறவினர் முத்துலட்சுமி (வயது 50) ஆகியோர்  பூபாலை தகாத வார்த்தையால் பேசி கற்களை வீசி தாக்கி கொலை செய்து விடுவேன் மிரட்டி உள்ளனர்.


இதில் காயமடைந்த பூபால் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies