பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மற்றும் இரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மற்றும் இரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்.


மை தருமபுரி அமைப்பு மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் இணைந்து 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வும் மற்றும் ரத்ததான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து மை தருமபுரி தன்னார்வ அமைப்பின் தலைவர் சதீஷ் கூறுகையில், 18 வயது பூர்த்தியான நபர் வாக்களிக்கும் உரிமை பெறுவதைப் போல பிறர் உயிரையும் காக்கும் ரத்ததானமும் அளிக்க வேண்டி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தோம். 


ஏப்ரல் 19 வாக்குப்பதிவு செய்தும், இரத்ததான கொடை அளித்தும் விழிப்புணர்வை பலர் பின்பற்றினர். அதில் மருத்துவர் முகமத் ஜாபர், வினோத், சுரேஷ், சீனிவாசன், சுதாகர், ஆதி பிரியன், முருகன் ஆகியோர் வாக்குப்பதிவு அளித்து இரத்ததானம் கொடை வழங்கினர். வாக்களித்து நாட்டையும் காப்போம் இரத்ததானம் அளித்து பிறர் உயிரைக் காப்போம் தலைகவசம் அணிந்து நாமும் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். என கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.