ஈச்சம்பாடி உயர்நிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

ஈச்சம்பாடி உயர்நிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.


கம்பைநல்லூர் அடுத்த ஈச்சம்பாடி உயர்நிலைப் பள்ளியில்  தொண்டு நிறுவனங்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ  மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுவதற்கான கற்றல் உபகரணங்களை வைகை தொண்டு நிறுவனம் இணைந்து V4U டிரஸ்ட் தலைவர் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மற்றும் குமரேசன் தலைமை தாங்கி வழங்கினார். 


இதில் பள்ளி  தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உதவி ஆசிரியர்கள் மற்றும் ராகேஷ், மணியரசன், சின்னமணி மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞரணி நற்பணி மன்ற நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.