தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (22.04.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் குறித்து எவ்வித புகாருமின்றி சீராக வழங்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குடிநீரினை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்தவும், ஒகேனக்கல் குடிநீரை முறையாக பயன்படுத்தவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க அனைத்து ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி குடிநீர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊரக பகுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டித்திடவும் / முறைப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், அனைத்து ஊராட்சிகளிலுள்ள குக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குழுக்களாக செயல்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை உடனுக்குடன் சரிசெய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (வ.ஊ) / (கி.ஊ) அறிவுரை வழங்கப்பட்டது.
மின் விசைப் பம்புகளில் பழுதோ அல்லது குடிநீர் குழாய் உடைப்போ ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரிவுகளின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரின் அளவும், பட்டியலில் குறிப்பிட்டுள்ள அளவினையும் ஒப்பிட்டு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பழுதடைந்த மின்மோட்டார்கள் மற்றும் குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மண்டல அலுவலர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேரில் கள ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் செயலாற்ற வேண்டுமெனவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட Low Voltage Problems இல்லாத வகையில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நிர்வாக உதவியாளர் வளர்ச்சி திரு.வேடியப்பன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், நகராட்சி பொறியாளர் திருமதி.மகேஸ்வரி, அனைத்து மண்டலத் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக