மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு, பேபி ஷாலினி கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் அதே பகுதியில் வசிக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து, வேல்முருகன் அவ்வப்போது அங்கு சென்று குடும்பம் நடத்த மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசில் பேபிஷாலினி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், வேல்முருகனை கைது செய்து, தருமபுரி சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். கடந்த 8 மாதத் திற்கு முன்பு, பாலக்கோடு நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு, பேபிஷாலினி வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் பேபிஷாலினி, தனது தம்பி ரமேசுடன் பெங்களூருவுக்கு சென்று சிப்ஸ் கடை வைத்தார். நேற்று விவாகரத்து வழக்கு பாலக்கோடு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக பெங்களூருவில் இருந்து, பேபிஷாலினி நேற்று முன்தினம் மதியம் ஊருக்கு வந்தார்.
இதையறிந்த, வேல்முருகன் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசியுள்ளார். சமாதானம் ஆகாததால் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பேபி ஷாலினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய வேல்முருகனை தேடி வந்த நிலையில் நேற்று. முன்தினம் இரவு ஊரின் சுடுகாட்டிற்குசெல்லும் வழியில் உள்ள மரத்தில், வேல்முருகன் தூக்கில் சடலமாக தொங்கினார்.
தகவலின் பேரில், அங்கு சென்ற பஞ்சப்பள்ளி போலீசார் அவரது சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இருவரின் சடலங்களும், பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேல்முருகனுக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் இடைப்பாடி ஆகும். அங்கிருந்து வந்த உறவினர்களிடம் அவரது சடலத்தை போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.jpeg)