Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க வாய்ப்பு.


தருமபுரி மாவட்டத்தை சார்ந்த இளநிலை படை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் (JCO’s and Officers) அறிவது.  தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் பிரதேசத்தின் கீழ் இயங்கும் BP-Hosur கோகோ சில்லறை விற்பனை நிலையத்திற்கு சேவை வழங்குநரை (Coco Service Provider for Petroleum Retail Outlets) நியமிக்க உள்ளார்கள்.

இணையதள முகவரி: www.bharatpetroleum.in


வயது : 21 முதல் 60 வரை


கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்கும் நபர் குறைந்த பட்சம் 15 இலட்சத்திற்கு அசையும் சொத்துக்களை  பெற்றவராக இருத்தல் வேண்டும். வங்கியால் 50 லட்சத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு இணையதளமுகவரியில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.03.2024-க்குள், எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளநிலை படை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கீழ்க்காணும் முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Territory Manager (Retail) M/s.Bharat Petroleum Corporation Ltd, Karur Territory Office, Athur & Kadaparai-Vill, Karur-639 008.  /T.N, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884