Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பாஜக நகர மண்டல அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாஜக நகர மண்டல் அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட் பாஜக கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நகர தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது,


கூட்டத்திற்க்கு மாநில பொதுக்குழு உறுப்பிணர் குணசேகரன், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பி.கே.சிவா, பாலக்கோடு தேர்தல் துணை பொறுப்பாளர் முனிராஜ், மாவட்ட செயலாளர் தெய்வமணி, ஒன்றிய தலைவர்கள் சேட்டு, பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்து கொண்டு பேசும் போது, மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு உரம், பூச்சி சொல்லி மருந்து, விதை உள்ளிட்டவைகள் மாணிய விலையில் வழங்கி வருகிறது, 5 இலட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது,விஸ்வகர்மா, திட்டத்தின் கீழ் 18 வகையான தொழில்களுக்கு 1 இலட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடனுதவி வழங்கி வருகிறது.


எனவே மீண்டும் பிரதமராக மோடி ஆட்சியமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் செளமியா அன்புமணியை மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies