Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு சிப்காட் வரக்கூடாது என தடுத்தவர்கள் பாமகவினர், அரூரில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு


அரூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.மணி அவர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில்  மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை வழங்கி பெண்கள் வாழ்வில் ஔியேற்றிய அரசு திராவிட மாடல் அரசு பெரியார் கண்ட கனவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார் முதன்முதலில் தருமபுரியில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி  வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது.


உள்ளாட்சியில் பெண்களுக்கு ஐம்பது சதவிதம் உயர்த்தியது திமுக அரசு பெண்களுடைய ஆதரவு எப்போதும் திமுகவிற்கு உண்டு பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில்  எதுவும் செய்யவில்லை திமுக அரசின் சாதனைகள் வீடு தேடி வருகிறது சிப்காட் வரக்கூடாது என தடுத்தவர்தான்  பாமக தலைவர்  தமிழக முதல்வர் உள்ளாட்சி துறை அமைச்ராக இருந்தபோது  ஓகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டுவரப்பட்டது இரண்டாம் கட்டமாக பத்தாயிரம் கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை பெறுகிறார்கள்  எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கூறினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள்  விசிக சி.கே.சாக்கன்சர்மா காங்கிரஸ் பி.தீர்த்தராமன் சிபிஎம் ஏ.குமார் மதிமுக கோ.ராமதாஸ் கொமதேக செந்தில்முருகன் தேமக இனமுரசுகோபால் மமக சுபேதார் ஆதிதமிழர் பேரவை ராஜ்குமார் முக்குலத்தோர் புலிப்படை ரமேஷ்  திமுக மாவட்ட அவை தலைவர் கே.மனோகரன் துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் நகர செயலாளர் முல்லைரவி பேரூராட்சி தலைவர் இந்திராணி துணை தலைவர் சூர்யாதனபால் ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன் ஆர்.வேடம்மாள் வே.சௌந்தரராசு இடிடி செங்கண்ணன் சரவணன் முத்துக்குமார் விவசாய அணி தலைவர் சி.தென்னரசு ஐடிவிங்   கு.தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies