Type Here to Get Search Results !

தருமபுரிக்கு வருகைதரும் திருமதி. அருணா ரஜோரியா வருகை, ஏதேனும் புகார்கள் இருப்பின் அவரை நேரில் தெரிவிக்கலாம்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரிலும், 9363962216 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த தேர்தல் பொது பார்வையாளர் அவர்களை தருமபுரி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.என்.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாக 26.03.2024 அன்று ஆலோசனை மேற்கொண்டனர்.


இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: 10. தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 57-பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி, 60-பாப்பிரெட்டிப்பட்டி, 60-அரூர் (தனி) மற்றும் 85-மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களது 9363962216 என்ற கைபேசி எண்ணில் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம்.


மேலும், தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் திருமதி.எஸ்.ரேவதி அவர்களின் கைபேசிஎண்:9994390925 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தருமபுரி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து, இன்றைய தினம் (27.03.2024) தருமபுரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையினை (EVM Strong Room) தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies