தமிழ்நாடு ஊரக வாழ்வாதரம் இயக்கம் சார்பில் கடத்தூரில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 மார்ச், 2024

தமிழ்நாடு ஊரக வாழ்வாதரம் இயக்கம் சார்பில் கடத்தூரில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கடத்தூர் பேரூராட்சியில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியரும்  தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தி அறிவுரையின் பேரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில்100% வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இருந்து துவங்கிய பேரணியை தருமபுரி மகளிர் திட்ட இயக்குனர் பத்ஸ்ரீமுகமது நசீர் தலைமையேற்று துவக்கி வைத்தார். 


நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் மாலதி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கலைவாணி, மீனா, பேரூராட்சி உதவியாளர் பெருமாள், டிஆர்பி மாவட்ட வல்லுநர் பெருமாள், வட்டார இயக்க மேலாளர் முத்துசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா, ரத்தினவேல், இலக்கியா, அமிர்தவள்ளி, தமிழ்ச்செல்வி, அறிவொளி, உள்ளிட்ட ஏராளமானோர் மகளிர் பேரணியில் பங்கு பெற்றனர். 


பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை, வாக்குக்கு பணம் பெற்று வாக்களிக்கக் கூடாது என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டு கடத்தூரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.