Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆயுத படை மைதானத்தில் போலீஸ் உடற்தகுதி தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP.ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடைபெறுகிறது.


தருமபுரி மாவட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வானது வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது இதில் நமது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்து தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 695 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது அதில் முதற்கட்டமாக 400 நபர்களுக்கு உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நிகழ்வு நடைபெறுகிறது இதில் சேலம் சரக டிஐஜி திருமதி. உமா அவர்கள் மேற்பார்வையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் நடைபெறுகிறது.


இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பிரமணியன் காவல் துணைக்  கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சுவேதா மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies