Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

போயர் சாலை கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்த கோயில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போயர் சாலை கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் நிலம் உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள கோழிப்பண்னை உரிமையாளர் கருப்பண்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.


மேலும் அப்பகுதியில் வசிக்கும் போயர் இன மக்களின் வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் கோயில் நிலம் வழியாக அருகில் உள்ள காட்டு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போயர் சாலை பகுதியை சேர்ந்த  வள்ளி (வயது.38) அவரது மகள் கோகிலா (வயது. 20) ஆகியோரை கருப்பண்ணன் கோயில் நிலம் வழியாக வரக்கூடாது என ஆபாசமாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவத்த இருவரையும், கட்டையால் அடித்ததில் படுகாயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


மேலும் கருப்பண்ணன் வேண்டுமென்றே தனது கோழிப்பண்ணையில் இருந்து இறந்த கோழி மற்றும் கோழி கழிவுகளை போயர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு வசிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளதால் படிக்க வரும் குழந்தைகள் பெரும் பாதிப்பிற்க்கு ஆளாகி வருகின்றனர்.


எனவே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மீட்டெடு, மீட்டெடு அறநிலையத் துறை இடத்தை மீட்டெடு, கைது செய், கைது செய் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கயவர்களை கைது செய், காப்பாற்று, காப்பாற்று பெண்களின் கற்பை காப்பாற்று உள்ளிட்ட கோஷங்கள் எமுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்க்கு வந்து பெண்களை அடித்து, ஆபாசமாக பேசியவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் கோயில் நிலத்தை மீட்டு அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies