Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே தர்மபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலே கார் உரிமையாளர் உயிரிழப்பு.


தர்மபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில்  பாலக்கோடு அருகே கசியம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்விஃப்ட் டிசைர் ரக காரின் முன்பக்க பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர் காரிலிருந்து இறங்குவதற்கு முன்பு திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் சொகுசு கார் மேலும் தீ வேகமாக பரவிய  கார் முழுவதும் எரிந்து கருகி சேதமானது. காரை ஓட்டி வந்தவர் தீயில் சிக்கி முழுவதுமாக எரிந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயைணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,  தீப்பற்றி எரிந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ்முரளி என்பதும் தெரியவந்தது.


மேலும் காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்தும் பாலக்கோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies