Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றம். வருவாய் துறையினர் அதிரடி.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்துள்ள உலகான அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 31 சென்ட் பரப்பளவில் ராமன் குட்டை ஏரி உள்ளது. இதனை கடந்த 40 ஆண்டுகளாக நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.

ஏரியை மீட்டு தண்ணீர் தேக்கினால் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும், இதனால் செழிக்கும் என்பது  அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையாக இருந்தது. ஏரியை மீட்க கெண்டேயன அள்ளி பஞ்சாயத்து சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், ராமன் குட்டை ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன், மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணி ஆகியோர் தலைமையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு 3 ஏக்கர் 31 சென்ட் நிலம் மீட்கப்பட்டு எல்லை கல் நடப்பட்டது. அதனை தொடர்ந்து  மீட்கப்பட்ட ராமன்குட்டை ஏரி, நிலம் கெண்டேயன அள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies