Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மதுபான கடையில் 10 ரூபாய் ஸ்டிக்கர் கேட்டு மதுபிரியர்கள் தகராறு - சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது, இங்கு தமிழக அரசு சுற்றுலா தலங்களை பாதுகாக்கும் பொருட்டு நீதிமன்ற  உத்தரவின் படி 5 மாவட்டங்களில் சோதனை முறையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் வகையில்,மதுபாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்படுகிறது, திருப்பி ஒப்படைக்கும் காலி மதுபாட்டில்களை பெற்று கொண்டு 10 ரூபாயை திருப்பி வழங்கி வருகின்றனர். 

கடைக்கு சென்ற மதுபிரியர்கள் ஆப் மதுபாட்டிலை வாங்கியுள்ளனர். அப்போது விற்பனையாளர் கூடுதலாக 20 ரூபாய் பிடித்தம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபிரியர் ஒரு பாட்டிலுக்கு ஒரு லேபிள் ஒட்டியுள்ளீர்கள் அதற்கு  10 ரூபாய் தான் எடுக்க வேண்டும் மீதி 10 ரூபாய் திருப்பி தர சொல்லி கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் ஒரு பாட்டிலுக்கு ஒரு லேபிள் தான் ஒட்ட முடியும், என கூறியதுடன் 10 ரூபாயை திருப்பி தர மறுத்துள்ளார், மது பிரியரோ அப்படி என்றால் 2 குவாட்டர் பாட்டில்களாக தாருங்கள் என கூறி தகராறில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி  வைரலாகி வருகிறது.


இது குறித்து மதுபான மேற்பார்வையாளர் மாது என்பவரிடம் கேட்டபோது மற்ற மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பணம் எடுக்கிறார்கள் நாங்கள் குறைவாகத்தான் எடுக்கிறோம். தமிழக அரசு கொடுக்கும் சம்பளத்திற்க்கு வேலை செய்வதே கஷ்டம், இந்த வேலையே எனக்கு தேவையில்லை என காட்டமாக பதில் கூறி உள்ளது. மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies