Type Here to Get Search Results !

தொப்பூர் கணவாயில் விபத்து; போக்குவரத்து பாதிப்பு.


தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஈச்சர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து, கார் கன்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

விபத்தில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது, நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எவதுவுமில்லை, போக்குவரத்து பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது, விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தொப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொப்பூர் கணவாய் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வரும்போது மட்டுமே விபத்துக்கள் நடைபெறாது, எப்போது உயர் மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் எதர்பார்ப்பாக உள்ளது, தொப்பூர் கணவாயில் விபத்திற்கு முக்கிய காரணம் சாலை கட்டமைப்பு சரியில்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது, வளைவான, பள்ளமான சாலை பகுதியாக இருப்பதால், வாகனங்கள் கட்டுபடுத்த முடியாமல் அதி வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது,


சமீபத்தில தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தொப்பூா் கணவாய் பகுதியில் 775.41 கோடி ரூபாய் மதீப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்ட போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies