இதில் நகர தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் காவேரிவர்மன், மாவட்ட செயலாளர் தெய்வமணி, மாநில துணைத் தலைவர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பிணர் குணசேகரன், மாவட்ட நலத்திட்ட பிரிவு துனைத் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெருங்காடு, வேடம்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் பேருந்து வசதி, சாலை வசதி, நியாய விலை கடை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டியும், அப்பகுதி மக்களுக்கு இலவச வீடு, இலவச பட்டா வழங்க கோரியும், பல ஆண்டுகளாக இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு ஒன்றிய தலைவர் பசுபதி, சட்டமன்ற பார்வையாளர் வக்கில் முனிராஜி, மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ஸ்ரீதேவி, கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் முனிராஜ், மேற்கு ஒன்றிய பொது செயலாளர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

