தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (13.01.2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்ட வத்தல்மலையில் சுற்றுலா பொங்கல் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, பொதுமக்கள் பங்கேற்புடன் கிராமத்தை தூய்மைப்படுத்தி கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் வத்தல்மலை கிராம பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.பா.கதிரேசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மா.சத்யா, திரு.அனந்தராம விஜயரங்கன், கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சி.தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.