Type Here to Get Search Results !

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை.


தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.


மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளத் தலைமை ஆசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884