Type Here to Get Search Results !

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சி பயணத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.


தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆப., அவர்கள் இன்று (03.01.2024) இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியவை இணைந்து 2023-2024-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வியின் அவசியத்தை உணர்த்திடும் பொருட்டும் உயர்கல்வியினை தொடர்ந்து பயின்றிடவும் தமிழ்நாடு அரசால் தருமபுரி மாவட்டத்திலுள்ள 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று கல்லூரி ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சி இன்று முதல் 04.01.2024, 05.01.2024 மற்றும் 08.01.2024 ஆகிய நாட்கள் நடத்தப்பட உள்ளது.


எனவே மேற்படி நாட்களில் 12-ம் வகுப்பு பயிலும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3745 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டல் சார்ந்து கீழ்க்கண்ட கல்லூரிகளின் கல்லூரி வளாகம் கல்லூரியில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், கலையரங்கம், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அறிந்து கொள்ள களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்துவர மற்றும் அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆர்வமூட்டல் களப் பயண நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி, அரசு பொறியியற் கல்லூரி, செட்டிக்கரை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி, அரசு கலை மற்றும் உறுப்புக் கல்லூரி,பாலக்கோடு, அரசு பெண்கள் கலை மற்றும் உறுப்புக் கல்லூரி காரிமங்கலம், அரசு தொழிற் பயிற்சி நிலையம் கடகத்தூர், தருமபுரி, அரசு சட்டக் கல்லூரி மாட்லாம்பட்டி,தருமபுரி ஆகிய கல்லூரிகள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் திரு.பொ.ரவிக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884