Type Here to Get Search Results !

பெண் சிறுத்தையை தேடி அலையும் ஆண் சிறுத்தை, ஆத்திரத்தில் ஆடுகளை கடித்து குதறி வரும் கொடூரம். பாதுகாப்பு கேட்டு ஊர்மக்கள் வனச்சரக அலுவலரிடம் மனு.


ஜக்கசமுத்திரம் அருகே பெரியகொடிகான அள்ளி கிராமத்தில் பெண் சிறுத்தையை தேடி அலையும் ஆண் சிறுத்தை, ஆத்திரத்தில் ஆடுகளை கடித்து குதறி வரும் கொடூரம். பாதுகாப்பு கேட்டு ஊர்மக்கள் வனச்சரக அலுவலரிடம் மனு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட காப்புக் காட்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஒரு ஆண் சிறுத்தை, ஒரு பெண் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றி வந்தது, இந்நிலையில் கடந்த மாதம் 26 ம் தேதி, வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட கண்ணியில் சிக்கி பெண் சிறுத்தை ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வந்ததை அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு மருத்தவ சிகிச்சையளித்து ஒகேனக்கல் காப்புக் காட்டில்  விட்டனர். ஆனால் சில தினங்களிலேயே பெண் சிறுத்தை  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.


இந்நிலையில் கடந்த 25 நாட்களாக காட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பெண் சிறுத்தையை தேடி ஆண் சிறுத்தை ஆக்ரோஷத்துடன் சுற்றி வருகிறது, மேலும் ஆத்திரத்தில் ஆடுகளை கடித்து குதறி விட்டு செல்கிறது.


இதேபோல் நேற்றிவு ஜக்கசமுத்திரம் அருகே பெரியகொடிகான அள்ளி கிராமத்திற்க்கு சென்ற ஆண் சிறுத்தை அழகேசன் என்பவருடைய ஆட்டுப்பட்டியில் புகுந்து 5 ஆடுகளை கடித்து குதறின, ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அழகேசன் சிறுத்தை புலி கடித்ததால் கண்முன்னே  ஆடுகள் துடிதுடித்து இறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து பெரியகொடிகான அள்ளி கிராம மக்கள், தொடர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைக மற்றும் மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஆண்சிறுத்தை மற்றும் குட்டிகளை பிடித்து வனவிலங்கு சரணாலயத்தில் விட வேண்டும், மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என  பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜிடம் மனு அளித்தனர்.


கடந்த 18ம் தேதி கேசர்குளி காப்புக் காட்டில் யாணைக்கு பயந்து ஓடியதில் கீழே விழுந்து ஜோகிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனி  என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுத்தை புலியும் பெண் சிறுத்தையை தேடி ஆக்ரோஷத்துடன் சுற்றுவதால்  பொதுமக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies