Type Here to Get Search Results !

சின்னகும்மனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட சின்னகும்மனூர் கிராமத்தில் 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய  ஊராட்சி மன்ற கட்டிடத்தை கானொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தை  பயன்பாட்டிற்க்கு கொண்டு வரும் நிகழ்ச்சி  ஊராட்சி மன்ற தலைவர் உமா துரை தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், ஜெகதீசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துனைத் தலைவர் தங்கம்மாள் கருப்பண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவன், திமுக  விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, மாவட்ட கவுன்சிலர், சரவணன், வார்டு உறுப்பிணர்கள் திவ்யா கலைச்செல்வன், பிரேமதி முருகன், குமார், குமரேசன், சண்முகம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies