Type Here to Get Search Results !

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்..


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் சுபாஷ் (30) இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இராணுவத்தில் சேர்ந்து செகந்திராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளார், இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரின் மகள் இந்துமதியை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 11/12/23 அன்று ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவ முகாமில் அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், சக ராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரத பரிசோதனை  முடிந்து இன்று சுபேஷின் உடல சொந்த ஊரான பள்ளிப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies